Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

சக்தி வாய்ந்த வெடிகளால் பாறைகள் தகர்ப்பு… வீடுகளில் விரிசல்.. பொதுமக்கள் முற்றுகை போராட்டம்..!!!

சக்தி வாய்ந்த வெடிகளால் பாறைகளை தகர்க்கும் பணி மேற்கொள்வதன் காரணமாக வீடுகளில் விரிசல் ஏற்படுவதாக பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருத்தணி ஒன்றியம் சூரிய நகரம் ஊராட்சியில் அரசு கல் குவாரி இருக்கின்றது. இங்கே ஐந்து வருடத்திற்கு குத்தகையை தனியாள் ஒருவர் எடுத்திருக்கின்றார், சென்ற இரண்டு மாதங்களாக இந்த கல்குவாரியில் கற்களை வெட்டி எடுக்கும் பணிகள் நடந்து வருகின்றது.

இந்த நிலையில் நேற்று காலையில் எல்லாம்பள்ளி கிராம மக்கள் அரசு அனுமதி வழங்கிய அளவைவிட அதிகமாக கற்கள் தோண்டப்படுவதாகவும் கல்குவாரியில் சக்தி வாய்ந்த வெடிகள் வைக்கப்படுவதால் இதன் அருகே இருக்கும் வீடுகளில் அதிர்வு ஏற்பட்டு விரிசல் ஏற்படுவதாகவும் கூறி முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். மேலும் கல்குவாரியில் கற்களை ஏற்றுக்கொண்டிருந்த எட்டு லாரிகளையும் சிறை பிடித்தார்கள்.

இதன் பின் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதை அடுத்து அதிகாரிகள் ஆய்வு நடத்துவார்கள் என போலீசார் தெரிவித்தனர். மேலும் தற்காலிகமாக கல்குவாரி செயல்படாது எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றார்கள்.

Categories

Tech |