சிபிஎஸ்சி அமைப்பு கொரோனோ முன்னெச்சரிக்கை குறித்து சில விதிமுறைகளை அமுல்படுத்தியுள்ளது.
சிபிஎஸ்சி வழியில் பயின்ற 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வழக்கம்போல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து சிபிஎஸ்இ அமைப்பு சில முக்கிய தகவல்களை அளித்துள்ளது. அதில்,
தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு முறையான முக கவசம் அணிய வேண்டும் எனவும், தேர்வெழுதும் மாணவர்களுக்கு இடையே ஒரு மீட்டர் தொலைவு இருக்க வேண்டும் என்றும், தேர்வறையில் முன்னெச்சரிக்கை குறித்த நடவடிக்கை அதற்கான கட்டுப்பாடுகள் குறித்து விளக்கம் ஒட்டப்பட்டிருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இறுதியாக தேர்வு அறைக்கு வரும் கண்காணிப்பாளர் இவை அனைத்தும் சரியாக இருக்கிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.