வெயில் சூட்டை தணிக்க தேவையான சில டிப்ஸ்களை இந்த செய்தி தொகுப்பில் காண்போம்.
வெயில் சூட்டினால் வரும் வயிற்று வலிகளை தவிர்க்க அல்லது வந்த வயிற்று வலியை போக்க கசகசாவை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து அதை பாலில் சேர்த்து கொதிக்கவைத்து விட்டு பின் தேவையான சர்க்கரை சேர்த்து பருகினால் உடனடியாக வயிற்றுவலி நீங்கும். இதனை குழந்தைகளுக்கு கொடுத்தால் குழந்தைகளின் பலத்தை இந்த பால் அதிகரிக்கும்.
முள்ளங்கியில் இயற்கையாகவே நீர்ச்சத்து அதிகம். ஆகையால் வெயில் காலங்களில் முள்ளங்கியை அதிகம் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடல் சூடு, உடல் வறட்சி ஆகியவற்றை முள்ளங்கி குறைக்கும் மேலும் உடல் சூட்டினால் வரும் பக்கவாதத்தை முற்றிலுமாக நீக்கும்.