Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு… மனதில் அன்பு, கருணை அதிகரிக்கும்.. முயற்சிகள் தடையாகும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று மனதில் அன்பும் கருணையும் உங்களுக்கு அதிகரிக்கும். தொழில் வியாபாரம் செழித்து புதிய சாதனை இலக்கை அடைய கூடுதல் வருமானம் சேமிப்பு கூடும். பிள்ளைகள் விரும்பி பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். இன்று கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை தவிர்ப்பது ரொம்ப நல்லது. முயற்சிகளில் இக்காலத்திலும் தடைகளை சந்திக்க கூடும். புதிய முயற்சிகள் ஏதும் இப்போதைக்கு வேண்டாம் தொழில் வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டிகளையும், மறைமுக எதிர்ப்புகளையும் இன்று சந்திக்க நேரிடும். நெருங்கியவர்களை எதிரியாகப் மாறக்கூடும்.

நட்பு மத்தியில் நீங்கள் உதவிகள் செய்யும் பொழுது ரொம்ப கவனமாக செய்யுங்கள். யாருக்கும் இன்று உதவிகளை மட்டும் செய்ய வேண்டாம். சில விஷயங்களை பத்திரத்தில் முடியக் கூடிய வாய்ப்புகள் இருக்கும.  கூடுமானவரை இன்று ஆலயம் சென்று வந்து காரியத்தில் ஈடுபடுங்கள், ஓரளவு காரியம் சிறப்பை கொடுப்பதாகவே இருக்கும். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து மதிப்பு, உயரும். பொருளாதாரம் ஓரளவு சீராகவே இருக்கும்.

இன்று  மாணவச் செல்வங்கள் ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பார்த்து பாடங்களை படிப்பது ரொம்ப நல்லது. அப்பொழுதுதான் நீங்கள் படிக்க கூடிய பாடங்கள் உங்கள் மனதில் நிற்கும். கூடுமானவரை தேர்வு முடியும் வரை கொஞ்சம் கடினப்பட்டு பாடங்களைப் படியுங்கள், படித்த பாடத்தை மீண்டும் ஒருமுறை தயவுசெய்து எழுதிப் பாருங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று வியாழக்கிழமை என்பதால் சித்தர்களின் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்

Categories

Tech |