கொரோனா எதிரொலியாக சிபிஎஸ்இ பள்ளிகளில் நடைபெற்று வரும் தேர்வுகள் மார்ச் 31 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,0000க்கும் மேல் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவிலும் வைரசால் 166பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
இதையடுத்து இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளன. நாடு முழுவதும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கோவில், வணிக வளாகங்கள், மால்கள், தியேட்டர்கள், பார்க், டாஸ்மாக் என மக்கள் கூடும் இடங்களை மூட உத்தரவிட்டுள்ளனர். முக்கிய அரசியல் நிகழ்வுகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு பொதுத்தேர்வுகள் மட்டும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மார்ச் 31ம் தேதி வரை சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கு எந்த தேர்வும் நடைபெறாது என்று மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
சிபிஎஸ்சி தேர்வுகள் நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பு மார்ச் 31ம் தேதிக்கு பின்னர் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஜேஈஈ (JEE) என்ற இன்ஜினியரிங் கல்லூரியில் மெயின் தேர்வுகளும் பல்கலைக் கழக தேர்வுகள் மார்ச் 31ம் தேதி வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் எதிரொலியாக பல்வேறு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சிபிஎஸ்சி தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது