பஞ்சாபின் பகத்சிங் நகர் மாவட்டத்தை சேர்ந்தவர் 35 வயது இளைஞர் ஒருவர் கடந்த ஒரு வருடமாக ஆஸ்திரேலியாவில் பணியாற்றி வந்தார்.
ஆஸ்திரேலியாவில் இருந்து அண்மையில் நாடு திரும்பிய அந்த இளைஞருக்கு கொரானா தொற்று அறிகுறிகள் இருப்பதது. ஆகையால் டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த தார். அவர் பரிசோதனை முடிவுகாக காத்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு அவர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையின் 7-வது மாடியிலிருந்து அந்த இளைஞர் கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கொரானா குறித்து அவர் மிகவும் அச்சத்தில் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
ஆனால் தற்கொலை செய்து கொண்ட அந்த இளைஞருக்கு இன்னும் கொரானா இருப்பது உறுதி செய்யப்படவில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.