இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 168ஆக அதிகரித்துள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது.
இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,0000க்கும் மேல் அதிகமாக உயர்ந்துள்ளது.
168 individuals have been confirmed positive in India among the possibly infected cases and contacts of known positive cases. #Coronavirus pic.twitter.com/EuzndepOOR
— ANI (@ANI) March 19, 2020
இந்த நிலையில் இந்தியாவிலும் வைரசால் 168பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 168ஆக அதிகரித்துள்ளதாக இந்திய மருத்துவ அறிக்கை வெளியிட்டுள்ளது. 12,426 பேருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் 168 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் அளித்துள்ளது.