துப்புரவு பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இன்று சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி துப்புரவுப் பணியாளர்கள் இனி தூய்மைப் பணியாளர்கள் என அழைகப்படுவார்கள் என அறிவித்துள்ளார்.
மேலும் சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அவை,
- 12,552 ஊரக சுய உதவி குழுக்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் கடன் வழங்கப்படும்.
- மாநில சுய உதவி குழுக்களுக்கு, ரூ.14 ஆயிரம் கோடி வங்கி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- கரூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.330 கோடியில் சுற்றுவழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படும்.
- சென்னையில் 42 லட்சம் மின் நுகர்வோர்களுக்கு ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்த ரூ. 4,300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- தூத்துக்குடி, திருவள்ளுர் உள்ளிட்ட மாவட்டங்களில் 100 கி.மீ பாதையில் ரூ. 300 கோடியில் புதைவடை தடம் அமைக்கப்படும்.
- இயற்கை சீற்றங்களின் போது கடலோர மாவட்டங்களில் மின் கம்பங்கள் சேதம் அடைவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- புதைவட கம்பிகள் 200 கி.மீ தொலைவிற்கு அமைக்கப்படும் . முதற்கட்டமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதைவட கம்பிகள் அமைக்கப்படும்.
- 1,200 சிறு, குறு பாலங்கள் ரூ. 177 கோடியில் கட்டப்படும்.
- ஊரக பகுதியில் 299 சாலைகள் ரூ. 500 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
- ஊரக பகுதியில் குறுகலான சாலைகளில் 300 கி.மீட்டர்களுக்கு புதிய சாலைகள் அமைக்கப்படும்.
- கால்நடைகளை பாதுகாக்க ரூ. 258 கோடியில் 9,000 மாட்டுக்கொட்டைகள் 6,000 ஆட்டுக்கொட்டைகள் கட்டித்தரப்படும்.
- விளைநிலங்களை பெருக்கும் வகையில் 1000 கிணறுகள் ரூ. 99 கோடி மதிப்பில் அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.