மத்திய அரசு ஊழியர்களில் 50 சதவீதமானோர் வீட்டில் இருந்தே வேலை செய்தால் போதும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,000க்கும் மேல் உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் இந்தியால் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 168ஆக அதிகரித்துள்ளதாக சொல்லப்பட்ட நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மத்திய அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை பாதியாக குறைக்கப்பட்டது. 50 சதவீத BC மத்திய ஊழியர்கள் பணிக்கு வந்தால் போதும். மீதமுள்ள 50 சதவீத BC பிரிவு மத்திய அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.