Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3 ஆக உயர்வு ….!!

தமிழகத்தில் 3 ஆவதாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்வீட்டர் மூலம் தெரிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. அயர்லாந்தில் இருந்து தமிழகம் வந்த 21 வயது மாணவருக்கு 3ஆவதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது தகவல் வெளியாகி உள்ளது ஏற்கனவே இருந்த நிலையில் தற்போது மூன்றாவது நபருக்கு ஏற்பட்டிருக்கிறது ஒரு வயதானவர் அயர்லாந்து நாட்டில் உள்ள நகரில் இருந்து சென்னை வந்திருக்கிறார்

கடந்த 17ஆம் தேதி சென்னை வந்த அவர் வீட்டிலேயே வைக்கப்பட்டு கண்காணிக்கப்ட்டர். இவரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.  கொரோனா தொற்று இருக்கிறதா ? இல்லையா என்ற பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பதிவில் உறுதி செய்திருக்கிறார்.

Categories

Tech |