கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது.
இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9,000க்கும் மேல் உயர்ந்துள்ளது. இந்தியாவிலும் வேகமாக பரவி வந்த கொரோனா வைரஸ் பாதிப்பால் பாலியானோர் எண்ணிக்கை 4ஆக அதிகரித்தவுள்ளது. கர்நாடகா , டெல்லி, மராட்டியத்தை தொடர்ந்து பஞ்சாபில் சிகிச்சை பெற்று வந்த 72 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளர். இவர் ஜெர்மனில் இருந்து இத்தாலி வழியாக பஞ்சாப் திரும்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.