Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு… வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்… உரையாடும் பொழுது கவனம் தேவை..!!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று வெளியூர் பயணத்தின் பொழுது ரொம்ப கவனமாகவே இருக்க வேண்டும். எந்த ஒரு பணிகளையும் சிறப்பாகவே செய்து முடிக்க முடியாமல் மேல் அதிகாரிகளின் குறுக்கீடு இருக்கும். பிறர் செய்யும் குற்றங்களை நீங்கள் கண்டுபிடித்து கூறுவதால், உடன் இருப்பவர்களிடம் வீண் பிரச்சினைகளும், வாக்கு வாதங்களும் வந்துசெல்லும். நீங்கள் நேர்மையாக இருப்பது மற்றவர்களுக்கு எரிச்சலை ஊட்டும். கூடுமானவரை மற்றவர்களிடம் கொஞ்சம் கவனமாகவே நடந்து கொள்ளுங்கள். உரையாடும் பொழுது ரொம்ப கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.

வாக்குவாதத்தில் ஏதும் ஈடுபட வேண்டாம். இன்று  பழைய பிரச்சினைகள் ஓரளவு கட்டுக்குள் இருக்கும். இன்று கடன் வாங்கக் கூடிய சூழலும் இருக்கும். அதாவது குடும்ப தேவைகள் இன்று அதிகமாக இருப்பதால் கடன் வாங்கக்கூடிய பிரச்சனைகளும் இருக்கும். மற்றவர்களிடம் நீங்கள் அன்பாக நடந்து கொண்டால் தான் இன்றைய நாளை நீங்கள் சுமுகமாக சந்திக்கலாம். அதேபோல வெளியூர் பயணத்தின் பொழுது உடமைகளின் மீதும், புதிய நபர்களின் மீதும் கொஞ்சம் கவனமாகத்தான் இருக்க வேண்டும். புதிய நபரிடம் எந்தவித பேச்சுவார்த்தைகளில் கொடுக்காமல் செல்வது ரொம்ப நல்லது.

இன்று  காதலர்களுக்கு வாக்குவாதம் வரக்கூடிய சூழல் இருக்கும். காதலர்கள் கூடுமானவரை எந்தவித வாக்குவாதங்களும் இல்லாமல் செல்வது ரொம்ப நல்லது. இன்று மீன ராசிக்காரர்கள் மனைவியின் மூலம் ஒரு சிறு பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். ஆகையால் மனைவியிடம் கொஞ்சம் வாக்குவாதங்கள் இல்லாமல் நடந்து கொள்ளுங்கள், அது ரொம்ப நல்லது. எந்த ஒரு அவசர முடிவுகளை தயவுசெய்து இன்று எடுக்க வேண்டாம். தொழில் வியாபாரம் ஓரளவு சிறப்பை கொடுத்தாலும், தாமதம் கொஞ்சம் ஏற்படும். புதிய முயற்சிகள்  கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும். ஆகையால் புதிய முயற்சிகளை மட்டும் தள்ளிப் போடுவது இன்று ரொம்ப நல்லது.

யாரிடமும் இன்று கடன்கள் மட்டும் வாங்க வேண்டாம். இன்று  மாணவர்களுக்கு எதைச் செய்வதாக இருந்தாலும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்துச் செய்யுங்கள். அவசியமில்லாமல் எதையும் செய்யாதீர்கள். மாணவர்கள் கொஞ்சம் கடுமையாக உழைத்தே பாடங்களைப் படியுங்கள். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு ஒரு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுப்பதற்கு பழகிக் கொள்ளுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்புடன் இருக்கலாம்.

அதிர்ஷ்ட திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் இளம் மஞ்சள் நிறம்

Categories

Tech |