Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

உடலுக்கு சத்தான பசலைக்கீரை சப்பாத்தி!

தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு – 2 கப்,
தயிர் – 2 ஸ்பூன்,
பசலைக்கீரை – 1 கப்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு,
பச்சை மிளகாய் – 2,
இஞ்சி – 1 துண்டு,
சீரகம் – 1 டீஸ்பூன்,
பூண்டு – 2 பல்,
மல்லித்தழை – 50 கிராம்,
பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை.

செய்முறை :

முதலில் இஞ்சி, பூண்டு, பச்சை மிள காயை சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அல்லது குக்கரில் பொடியாக நறுக்கிய கீரை, மல்லித்தழை, தயிர், அரைத்த இஞ்சி விழுது, பெருங்காயத்தூள், சீரகம் சேர்த்து கலந்து வேகவைத்து எடுத்து கொள்ளவும்.

இதனை தண்ணீருக்கு பதிலாக கோதுமை மாவில் சேர்த்து பிசையவும். சிறிது நேரம் ஊற வைத்து விட்டு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தியாக திரட்டிக் கொள்ளவும். தோசைக்கல்லை சூடு செய்து சப்பாத்தியை போட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.

Categories

Tech |