தனுசு ராசி அன்பர்களே..! இன்று உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் பெறமுடியாமல் கொஞ்சம் கடினம் படுவீர்கள். சிலருக்கு வீடு மாற்ற கூடிய சூழ்நிலையும், பணிபுரியும் பெண்களுக்கு உடன் பணிபுரிபவர்களுடன் பிரச்சனைகளையும் சந்திக்கக்கூடும். தொழில் வியாபாரம் போட்டிகள் குறையும். பண வரவு சிறப்பாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகமும் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். உறவினர்கள் வருகை இருக்கும். குடும்ப செலவு அதிகரிக்கும். வெளியூர் பயணங்களின் பொழுது கவனம் மட்டும் இருக்கட்டும்.
பொருட்களின் மீது ரொம்ப கவனமாக இருங்கள். புதிய நபரிடம் எந்தவித உரையாடலும் வேண்டாம். அடுத்தவர்களுக்காக பொறுப்புகளை தயவுசெய்து ஏற்காதீர்கள். மற்றவர்கள் பிரச்சனைகளில் தயவுசெய்து தலையிடாதீர்கள். மற்றவர்களுக்காக எந்தவித ஜாமீன் கையெழுத்தும் தயவுசெய்து போடாதீர்கள். இன்று கூடுமானவரை உடல் ஆரோக்கியத்தில் ரொம்ப கவனமாக இருங்கள். செய்யும் செயல்களை கொஞ்சம் யோசித்து முடிவெடுங்கள், அது போதும். மாணவர்களுக்கு கல்வியில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வது ரொம்ப நல்லது.
பாடங்களை மட்டும் கொஞ்சம் கவனமாகவே படியுங்கள். ஆர்வமாக செயல்படுங்கள், தேர்வு முடியும் வரை கொஞ்சம் கடினமாக உழையுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டும் இல்லை இன்று வெள்ளிக்கிழமை என்பது என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக வாரவாரம் கொடுப்பதற்கும் பழகிக்கொள்ளுங்கள், அனைத்து தோஷங்களும் நீங்கப் பெற்ற செல்வ செழிப்புடன் வாழலாம்.
அதிஷ்ட திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: ஊதா மற்றும் ஆரஞ்சு நிறம்