Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…எண்ணங்கள் மேலோங்கும்… முயற்சிகள் வெற்றியாகும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று சொந்த தொழிலை விரிவு படுத்த கூடிய எண்ணங்கள் மேலோங்கும். புதிய பூமி மனை வாங்கும் முயற்சியில் வெற்றி ஏற்படும். கலைஞர்களுக்கு  வரவேண்டிய பண வாய்ப்புகள் தட்டிச் செல்லும். புதிய  வாய்ப்புகள் கிடைக்கும், தடைகள் உண்டாகி கடும் சோதனைகள் ஏற்பட்டாலும் கவலை வேண்டாம். அனைத்து விஷயங்களும் சிறப்பாகவே நடக்கும். சம்பள பாக்கிகளும் இழுபறியான நிலையில் இருந்தாலும் அதற்கும் கவலைவேண்டாம், சரியான நேரத்திற்கு கையில் வந்து சேரும். தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும்.

வியாபாரத்திலிருந்த பிரச்சினைகள் குறையும். தொழில் விரிவாக்கம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பார்க்கும் இடத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண காரியங்கள் நல்லபடியாகவே கைகூடும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்த நிறமாகவே இருக்கும்.

அது மட்டுமில்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்புடன் வாழலாம். இன்று மாணவர்களுக்கு கல்வியில் எந்தவித தடையுமில்லாமல் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆர்வமாக கல்வியை தொடர்வீர்கள். தேர்வில் நல்ல மதிப்பெண்களை  எடுக்கக் கூடிய அமைப்பும் உங்களுக்கு இருக்கிறது.

அதிர்ஷ்ட திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |