Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

கொரோனாவில் ”அறிவியல் நமக்கு உதவவில்லை” – பிரதமர் மோடி வேதனை ….!!

கொரோனாவுக்கு அறிவியல் இதுவரை நமக்கு உதவவில்லை என்று பிரதமர் மோடி வேதனை தெரிவித்தார்.

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகின்றது. இந்தியாவில் 140க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்ட நிலையில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை , நடைபெற இருந்த தேர்வுகள் இரத்து , விமான போக்குவரத்து  என பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உலகம் முழுமைக்கும் மருந்து கட்டுபிடிக்காத நிலையில் பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களிடம் பேசினார். அப்போது அடுத்த சில வாரங்களுக்கு உங்கள் நேரம் எனக்கு வேண்டும். நாட்டு மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கொரோனாவை கட்டுப்படுத்த அறிவியல் நமக்கு இதுவரை உதவவில்லை என்று வேதனை அடைந்தார்.

தொடர்ந்து பேசிய அவர் , நம்மை நாமே தற்காத்துக்கொள்வதே பிரதான கடமையாக உள்ளது. கூட்டங்களை தவிர்த்து, அனைவரும் வீடுகளில் இருக்கவேண்டும். மார்ச் 22ம் தேதி மட்டும் மக்களே ஊரடங்கை அமல்படுத்தி கொள்ள வேண்டும்  தங்களுக்கு தாங்களே மக்கள் கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ள வேண்டும். மார்ச் 22ம் தேதி மட்டும் மக்களே ஊரடங்கு முறையை பின்பற்ற வேண்டும் என்று என்று உத்தரவிட்டார்.

மேலும் பொது சேவைகளில் உள்ளவர்களுக்கு நாடு தலைவணங்கிறது. மார்ச் 22ம் தேதி அன்று மக்கள் இல்லங்களில் இருந்தவாறு பொதுசேவை புரிவோரை ஊக்கப்படுத்த வேண்டும் என்று பிரதமர் தெரிவித்தார்.

Categories

Tech |