கொரோனாவுக்கு அறிவியல் இதுவரை நமக்கு உதவவில்லை என்று பிரதமர் மோடி வேதனை தெரிவித்தார்.
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகின்றது. இந்தியாவில் 140க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்ட நிலையில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை , நடைபெற இருந்த தேர்வுகள் இரத்து , விமான போக்குவரத்து என பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உலகம் முழுமைக்கும் மருந்து கட்டுபிடிக்காத நிலையில் பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களிடம் பேசினார். அப்போது ,
உலகம் மிகப்பெரிய சவாலை சந்தித்து வருகிறது. உலகப் போரை விட அதிக நாடுகளை பாதித்துள்ளது கொரோனா. தற்போது கொரோனாவை விட முக்கிய பிரச்சினை ஏதும் இல்லை. கொரோனா தாக்குதலை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. ஒவ்வொரு இந்தியனும் விழிப்புடன் இருக்க வேண்டிய நேரம் இது. மக்களை தனிமைப்படுத்தி, பரவலை தடுத்துள்ளது. 130 கோடிக்கும் மேல் மக்களை கொண்ட இந்தியா இதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது.
திடீரென இந்த வைரஸ் சில நாடுகளில் வேகமாகப் பரவி விட்டது. கொரோனா வைரஸ் பரவியது குறித்து இந்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. சில நாடுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வைரஸ் பரவலை தடுத்துள்ளது மத்திய சுகாதார துறை அமைச்சர் இதுவரை 8 உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.