Categories
உலக செய்திகள் சற்றுமுன்

#BREAKING : ”சீனாவை மிஞ்சிய இத்தாலி” தொடரும் உயிரிழப்பால் கதறல் …!!

கொரோனா வைரஸ் பாதிப்பில் சீனாவை விட இத்தாலியில் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியடையவைத்துள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது.

தற்போதைய தகவலில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் சீனாவை விஞ்சிஉள்ளது இத்தாலி. இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,400ஐ தாண்டியள்ளது. சீனாவில் இதுவரை 3,245 பேர் உயிரிழப்பு நிகழ்ந்துள்ள நிலையில் இத்தாலியில் இதுவரை 3,405 பேர் உயிரிழந்துள்ளனர்.

Categories

Tech |