Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

தண்டனை வேண்டாம்….. அதிகாலை 2.30க்கு மனு… நீதிமன்றம் அதிரடி உத்தரவு …!!

நிர்பயா குற்றவாளிகள் பவன்குப்தா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 குற்றவாளிகளும் தண்டனையில் இருந்து தப்புவதற்கான பல முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். இரவு 10 மணியளவில் டெல்லி நீதிமன்றத்தில்  தண்டனையை நிறுத்த கோரிய மனுவில் , கருத்தில் கொள்ள எந்த முகாந்திரமும் இல்லை என டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அதனை தொடர்ந்து அதிகாலை 2.30 மணிக்கு டெல்லி உச்சநீதிமன்றத்தில் 4 பேருக்கும் நாளை காலை 5.30 மணிக்கு திட்டமிட்டபடி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுமென டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பவன்குப்தா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு அவசர வழக்காக விசாரிக்கப்பட்டதில் உச்சநீதிமன்றமும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Categories

Tech |