டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா வழக்கின் முக்கிய குற்றாவளிகளான முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்ஷய்குமார் தாகூர் ஆகிய நால்வருக்கும் இன்று தூக்கு தண்டனை விதிக்கப்பட இருக்கின்றது . காலை 5.30 மணிக்கு நிறைவேற்றப்பட இருக்கும் தூக்கு தண்டனையை தொடர்ந்து திகார் சிறையில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
இதன் பின்னர் திகார் சிறை அதிகாரிகள் , குற்றவாளிகள் நான்கு பேருக்கும் மருத்துவ சோதனை முடிந்து விட்டது. அவர்களின் உடல்நலத்தில் எந்த பாதிப்பும் இல்லை. தூக்கிலிடப்படும் நடைமுறை முடியும் வரை சிறை வளாகம் பூட்டப்பட்டிருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
Tihar jail officials to ANI: Medical of all four death row convicts completed, all are fit and fine. Jail to be under lock-down till the process of hanging is completed. https://t.co/7xyjs4E1FS
— ANI (@ANI) March 19, 2020