Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

திகார் முன்பு போலீஸ் குவிப்பு….. சில நிமிடத்தில் தண்டனை நிறைவேற்றம் …!!

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா வழக்கின் முக்கிய குற்றாவளிகளான முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்ஷய்குமார் தாகூர் ஆகிய நால்வருக்கும் இன்று தூக்கு தண்டனை விதிக்கப்பட இருக்கின்றது . காலை 5.30 மணிக்கு நிறைவேற்றப்பட இருக்கும் தூக்கு தண்டனையை தொடர்ந்து திகார் சிறையில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

இதன் பின்னர் திகார் சிறை அதிகாரிகள் , குற்றவாளிகள் நான்கு பேருக்கும் மருத்துவ சோதனை முடிந்து விட்டது. அவர்களின் உடல்நலத்தில் எந்த பாதிப்பும் இல்லை. தூக்கிலிடப்படும் நடை முடியும் வரை சிறை வளாகம் பூட்டப்பட்டிருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

இதனிடையே திகார் சிறை வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. இன்னும் சில நிமிடங்களில் குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்கப்பட இருக்கின்றது.

Categories

Tech |