Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கு நீதி கிடைத்து விட்டது – நிர்பயா தாயார் பேட்டி ….!!

நிர்பயா கொலைக் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை திகார் சிறை நிறைவேற்றியது.

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா வழக்கின் முக்கிய குற்றாவளிகளான முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்ஷய்குமார் தாகூர் ஆகிய நால்வருக்கும் இன்று தூக்கு தண்டனை விதிக்கப்பட இருந்ததை தொடர்ந்து திகார் சிறையில் அதிகாரிகள் ஆலோசனை நடத்திதற்கு பின் குற்றவாளிகள் நால்வருக்கும் அதிகாலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இதனால் திகார் சிறை வளாகத்தில் ஆயிரக்கணக்கான போலீசார் , துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.இதனையடுத்து அங்கு கூடி இருந்த ஆயிரக்கணக்கான மக்கள் கோஷங்களை எழுப்பி கொண்டாடி வருகின்றனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய நிர்பயா தாயார் , எனது மகளுக்கு மட்டுமல்ல நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கு நீதி கிடைத்து விட்டது. ஒட்டு மொத்த தேசத்திற்கும் நீதி கிடைத்து விட்டது. நீதித்துறையை நம்பி இருந்தேன், அது பக்கபலமாக உள்ளது. ஊடகங்கள் பெரியளவில் உதவியாக இருந்தது,, நாங்கள் அவர்களுக்கு கடமைப்பட்டுள்ளோம். குடியரசுத்தலைவருக்கு நன்றி எங்களுக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி என்று நிர்பயா தயார் கண்ணீர் மல்க பேட்டியளித்தார்.

Categories

Tech |