நிர்பயா வழக்கு குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டதை அடுத்து அங்கிருந்தவர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா வழக்கின் முக்கிய குற்றாவளிகளான முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்ஷய்குமார் தாகூர் ஆகிய நால்வருக்கும் இன்று தூக்கு தண்டனை விதிக்கப்பட இருந்ததை தொடர்ந்து திகார் சிறையில் அதிகாரிகள் ஆலோசனை நடத்திதற்கு பின் குற்றவாளிகள் நால்வருக்கும் அதிகாலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக திகார் சிறை வளாகத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடியதை தொடர்ந்து , போலீசார் , துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் தூக்கில் போடப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தெரிவித்ததை தொடர்ந்து அங்கு கூடி இருந்த மக்கள் கோஷங்களை எழுப்பி, இனிப்பு பரிமாறி கொண்டாடினர்.
இதில் செய்தியாளர்களிடம் பேசிய நிர்பயா தாயார் , இந்த நிமிடம் எனது மகளுக்கு மட்டுமல்ல நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கு நீதி கிடைத்து விட்டது. ஒட்டு மொத்த தேசத்திற்கும் நீதி கிடைத்து விட்டது. நீதித்துறையை நம்பி இருந்தேன், அது பக்கபலமாக உள்ளது. ஊடகங்கள் பெரியளவில் உதவியாக இருந்தது,நாங்கள் அவர்களுக்கு கடமைப்பட்டுள்ளோம். குடியரசுத்தலைவருக்கு நன்றி எங்களுக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி என கண்ணீர் மல்க பேட்டியளித்தார்.
இதையடுத்து தூக்கு போடப்பட்ட குற்றவாளிகளை ஆய்வு செய்த மருத்துவர் அவர்கள் உயிரிழந்ததாக உறுதி படுத்தினாரர்.