உடலுக்கு நன்மை தரும் சர்க்கரைவள்ளிக் கிழங்கின் மகத்துவத்தை இந்த செய்தித் தொகுப்பில் காண்போம்.
சர்க்கரைவள்ளிக்கிழங்கு மனித உடலில் உள்ள இணைப்பு திசுக்களை அதிகரிக்கும் வைட்டமின் ஏ சத்தை அதிக அளவில் கொண்டுள்ளது. மேலும் உடல் சருமத்தை பொலிவோடு வைத்திருப்பதோடு நுண்ணுயிர் மற்றும் தொற்று கிருமிகளிடமிருந்து சருமத்தை நல்ல முறையில் பாதுகாக்கும்.
குறிப்பாக சருமத்தில் மற்றும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது சர்க்கரைவள்ளிக்கிழங்கு. ஆகையால் உடலுக்கு நன்மை தரும் சர்க்கரை வள்ளிக்கிழங்கை உண்டு நாமும் பயன்பெறுவோம்.