நியூசிலாந்து நாட்டின் நாடாளுமன்றத்தில் கருக்கலைப்பு குற்றம் அல்ல எனும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த 40 ஆண்டுகளாக நியூசிலாந்தை பொறுத்தவரை கருக்கலைப்பு செய்வது குற்றமாகவே கருதப்பட்டு வந்தது. இந்த நிலையில் அந்நாட்டின் குற்றவியல் சட்டத்தில் இருந்து, கருக்கலைப்பு குற்றம் என்று கூறப்பட்ட பிரிவை நீக்குவதற்கு முடிவு செய்யப்பட்டு, இதற்கான மசோதா அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
நியூசிலாந்து நாட்டில் வசிக்கும் பெண்கள் இனி 20 வாரங்கள் வரை தங்களது கர்ப்பத்தை கலைத்துக் கொள்வதற்கு தடை ஏதுமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.