உயிர்கொல்லி கொரோனா வைரஸை எதிர்க்க அமெரிக்க அதிபர் டிரம்ப் தன்னை போர்க்கால அதிபராக நியமனம் செய்து கொண்டார்.
உயிர்கொல்லி வைரஸான கொரோனோவை எதிர்ப்பதற்காக போர்க்கால அதிபராக தன்னைத்தானே அமெரிக்க அதிபர் டிரம்ப் நியமனம் செய்து கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், உலகம் முழுவதும் மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
அவர்களுக்கு உதவும் வகையில், அமெரிக்க ராணுவ கப்பல் மருத்துவ சேவையில் களமிறக்கி விடப்பட்டுள்ளது. உலக நாடுகளுக்கு தேவைப்படும் சேவையை தொடர்ந்து இது வழங்கும் என்று தெரிவித்தார். மேலும் உயிர்கொல்லி கொரோனோ வைரஸை முற்றிலுமாக நான் வீழ்த்தும் வரை மக்கள் தங்கள் வீடுகளுக்குள் மகிழ்ச்சியாக நாட்களை கழிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.