கொரோனாவுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரும் சூழ்நிலையில் சனிடைசர் தட்டுப்பாடு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக மதுரை மாணவர்கள் அதனை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
கொரோனோ விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரும் சூழ்நிலையில் சனிடைசர் தட்டுப்பாடு என்பது உலக அளவில் ஏற்பட்டு வருகிறது. இந்தியாவிலும் இதனுடைய தட்டுப்பாடு காரணமாக விலை சற்று அதிகம் உயர்த்தி விற்கப்பட்டு வருகிறது.
மேலும் சானிடைசர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் அவதி பட கூடாது என்பதற்காக மதுரை பார்மஸி கல்லூரி மாணவர்கள் மாநகராட்சியுடன் இணைந்து நாளொன்றுக்கு 100 லிட்டர் சனிடைசர் தயாரிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். மாணவர்கள் தாமாக முன்வந்து மேற்கொள்ளும் இந்த தொண்டு சேவை அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது.