Categories
தேசிய செய்திகள்

“உபி-சென்னை” பொது பெட்டியில் பயணம்….. தமிழகத்தில் கொரோனா..? சுகாதார துறை விளக்கம்….!!

உபியில் இருந்து ரயில் மூலம் தமிழகம் வந்த நபருக்கு கொரோனா  உறுதி செய்யப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்திலிருந்து இரண்டு நாளுக்கு முன் தமிழகம் திரும்பிய சென்னையை சேர்ந்த யுவான் என்பவருக்கு கொரோனோ பாதிப்பு உறுதியானது. இதையடுத்து அவர் வீடு மற்றும் பக்கத்து வீட்டு ஆட்களிடம் சோதனை மேற்கொள்கையில்,

40 நபர்களுக்கு கொரோனோ அறிகுறி இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. மேலும் அவர் உபியில்இருந்து ரயிலின் பொது பெட்டியில் சென்னைக்கு வந்துள்ளார். ஆகையால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவருடன் பயணித்தவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம். ஆகையால் உத்தர பிரதேசத்தில் இருந்து ரயிலில் வந்தவர்கள் ஏதேனும் அறிகுறி தென்பட்டால் தயவு செய்து உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் தனியாக சிகிச்சை பெறுங்கள் என சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |