Categories
தேசிய செய்திகள்

பயப்பட வேண்டாம்… இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைவுதான்!

உலகில் கொரோனா வைரஸ் மிக குறைவாக பாதிப்பை ஏற்படுத்திய நாடுகளில் தற்போது இந்தியாவும் இணைந்திருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வருகின்றது. நாளுக்குநாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகின்றது. 176 நாடுகளில் குடியிருந்து மிரட்டி வரும் கொரோனாவிற்கு இதுவரை 10,035 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 2,44,979 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் ஒவ்வொன்றும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்தியாவில் கொரோனா வைரசால் இதுவரை 206 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தவிர 20 பேர் குணமடைந்து, 5 பேர் பலியாகியுள்ளனர். ஐரோப்பிய மற்றும் அரேபிய நாடுகளில் ஏற்பட்ட பாதிப்புகளுடன் ஒப்பிட்டு பார்த்தால் இது மிகவும் குறைவுதான்.

முன்பு சார்ஸ் (sars) வைரஸ் பரவி அச்சுறுத்திய போது கற்றுக்கொண்ட பாடத்தின் மூலம் சிங்கப்பூர், ஹாங்காங் ஆகியவை சிறப்பான நடவடிக்கைகளை எடுத்ததன் காரணமாக, அங்கு தற்போது கொரோனாவால் பெரும் பாதிப்பு இல்லை. தற்போது அந்த பட்டியலில் இந்தியாவும் இணைந்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

Categories

Tech |