Categories
பல்சுவை

உலக தண்ணீர் தினம் விழிப்புணர்வு.. நிலத்தடி நீர் மற்றும் நீர் நிலைகளை பாதுகாப்போம்..!!

உலக தண்ணீர் தினம் நீரின்றி அமையாது உலகு அப்படி என்று வள்ளுவரின் வாக்கு இருக்கிறது. அதாவது இந்த உலக உயிர்களை வாழவைக்கும் அமிர்தம் அப்படி என்றும் கூறலாம் தண்ணீரை.

பல கோடி மக்கள் நீர் பற்றாக்குறை இருக்கக்கூடிய பகுதிகளில் வசித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி நீர் மாசுபடுவதால் உலகம் வறட்சியாலும், எதிர்காலத்தில் உலகம் பாலைவனமாக மாறக்கூடிய அபாயம் இருக்கும்.  அதனால் எதிர்கால தண்ணீர் தேவையை கருத்தில் வைத்து சந்திரன், செவ்வாய் கிரகங்களில் மனிதன் உயிர் வாழ முடியுமா.? தண்ணீர் இருக்கிறதா.? என்பதை விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து செய்து கொண்டும் வருகிறார்கள்.

உலகத்தில் 97.5 சதவீதம் உப்பு சுவை கொண்ட நீர் இருக்கிறது. மீதமுள்ள 2.5 சதவீதம் உள்ள நீர் சுத்தமான நீர். இதில் இரண்டு புள்ளி 2.2 சதவீதம் துருவ பகுதியில் பனிப்பாறைகளாகவும், பனிக்கட்டிகளாகவும்  மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது. எஞ்சிய இருக்கக்கூடிய புள்ளி 26 சதவிகிதம் தண்ணீர்தான் குடிநீராகவும், விவசாயத்துக்கும் பயன்படுத்தக்கூடிய நிலையில் இருக்கிறோம்.

மக்களுடைய தேவையே  இந்த தண்ணீர் பூர்த்தி செய்கிறதா என்பது தான், மிகப்பெரிய கேள்வி. உலகத்தில் கிடைக்க கூடிய சொற்ப அளவு குடிநீரும் கழிவுகளால் மாசடைந்து கொண்டிருக்கிறது. ஆண்டுதோறும் 40 ஆயிரம் டன் கழிவுகள் நீரை மாசுபடுத்தி கொண்டிருக்கிறது. நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டியது நம்முடைய கடமை.

நீர் ஆதாரங்களை காக்க வேண்டியது நமது அவசியம். குடிநீர் மாசுபடாமல் இருக்க உதவுவது மக்களின் சமுதாய கடமை என்றும், புரிந்து கொண்டு தண்ணீர் மாசு படாமல் நாம் சேர்ந்து பாதுகாப்போம்.

நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவோம், நீர்நிலைகளை பாதுகாப்போம். தண்ணீர் வீணாவதை தடுக்கும் உறுதிமொழியை உலக தண்ணீர் தினத்தன்று  ஏற்றுக் கொள்வோம்.

Categories

Tech |