Categories
உலக செய்திகள்

10 நிமிடத்திற்கு ஒருவர் பலி… கொரோனாவை கட்டுப்படுத்த திணறும் ஈரான்!

கொரோனா வைரசால் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும்  ஒரு ஈரானியர் பலியாவதாக ஈரான்  சுகாதார அமைச்சக செய்தித் தொடர்பாளர் கியானூஷ் ஜஹான்பூர் (Kiyanush Jahanpur) தெரிவித்துள்ளார்.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வருகின்றது. நாளுக்குநாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகின்றது. 176 நாடுகளில் குடியிருந்து மிரட்டி வரும் கொரோனாவிற்கு இதுவரை 10,035 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 2,44,979 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொடிய வைரஸ் ஈரானிலும் நாளுக்குநாள் மக்களை கொன்று குவித்து வருகின்றது.

Image result for Iranian health ministry spokesman Jahanpur says one Iranian dies every 10 minutes due to coronavirus

இதனிடையே கொரோனா வைரசால் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும்  ஒரு ஈரானியர் பலியாவதாக ஈரான்  சுகாதார அமைச்சக செய்தித் தொடர்பாளர் கியானூஷ் ஜஹான்பூர் (Kiyanush Jahanpur) தெரிவித்துள்ளார். மேலும் அவர், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் குறைந்தது 50 ஈரானியர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Image result for Iranian health ministry spokesman Jahanpur says one Iranian dies every 10 minutes due to coronavirus

அதேசமயம் ஈரான் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்றினால் 149 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. ஈரானில் இதுவரையில் மொத்தமாக கொரோனா வைரசால் 1,284 பேர் பலியாகியிருப்பதுடன், 18,407 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் ஈரான் கட்டுப்படுத்த திணறி வருகின்றது.

கொரோனா வைரசால் இத்தாலி – 3,405 , சீனா-  3,245 , ஈரான் – 1,284 , ஸ்பெயின் – 831 என பலியானோர்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்வது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |