Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் அத்தியாவசிய பொருட்கள் கடைகள் தவிர அனைத்து வணிக வளாகங்களையும் மூட உத்தரவு!

கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 200கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் முக்கிய வழிபாட்டு தளங்கள், வணிக வளாகங்கள், பள்ளிகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளது.

இதுகுறித்து நேற்று மாலை மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, வரும் ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் மட்டும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் வீட்டை விட்டு வெளியில் வருவதைத் தவிா்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில் டெல்லியில் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் தவிர அனைத்து வணிக வளாகங்களையும் மூட முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். டெல்லியில் இதுவரை 17 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் வணிக வளாகங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |