Categories
தேசிய செய்திகள்

BREAKING : இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 223 ஆக உயர்வு!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 223 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவில் ஆட்டத்தை தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே பயம் காட்டி வருகின்றது. இதுவரையில் 176 நாடுகளில் குடியிருந்து மிரட்டி வரும் கொரோனாவிற்கு இதுவரை 10,035 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 2,44,979 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. மத்திய மாநில அரசுகள் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 223 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 32 பேர் வெளிநாட்டினர் ஆவர். முன்னதாக 206 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 17 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 49 பேரும், கேரளாவில் 26 பேரும், உ.பியில் 22 பேரும், டெல்லியில் 16 பேரும், கர்நாடகா மற்றும் ராஜஸ்தானில் தலா 15 பேரும் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் டெல்லி, கர்நாடகா, பஞ்சாப், மகாராஷ்டிராவில் தலா ஒருவர் மற்றும் ராஜஸ்தானில் சிகிச்சை பெற்று வந்த இத்தாலியை சேர்ந்த ஒருவர் என மொத்தம்  5 பேர் இந்தியாவில் பலியாகியுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு 23 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

Categories

Tech |