Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இரும்பு…. புரத சத்துகளை அள்ளி தரும்….. தானிய லட்டு…..!!

இரும்பு மற்றும் தானிய சத்துகளை அள்ளித்தரும் தானிய லட்டு செய்வது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம்.

தேவையான பொருள்:

  பொடித்த சர்க்கரை, சத்து மாவு, நெய்

செய்முறை :

பொடித்த சர்க்கரையை கட்டிகள் இல்லாமல் நன்கு சலித்து சத்து மாவிற்கு ஏற்றார்போல எடுத்துக்கொள்ளவேண்டும். சர்க்கரையையும் மாவையும் ஒன்றாக கலந்து கிளறி விட்டு சர்க்கரை மாவு இரண்டும் ஒன்றாக சேரும் வரை விரவி கொண்டே இருக்க வேண்டும்.  பின் நெய்யை சூடாக்கி மிதமான பதம் வந்ததும் சர்க்கரை மாவு கலந்த கலவையில் ஊற்றி அதையும் நன்கு கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.

பின் உருண்டையாக பிடிக்க ஆரம்பித்தால் மாவு சிதறாது. பின் ஓரளவு கலவை கலந்த பின் லட்டு போல் தனித்தனியாக உருண்டை பிடித்து வைத்தால் தானிய லட்டு தயார். இந்த தானிய லட்டில் இரும்பு மற்றும் புரதச் சத்து அதிகம் இருப்பதால் குழந்தைகளுக்கு மிக உகந்தது . 

 

Categories

Tech |