சீனாவில் ஆட்டத்தை தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே பயம் காட்டி வருகின்றது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 223 ஆக உயர்ந்துள்ளது.
இதில் 3 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இதனிடையே ஒவ்வொரு மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பள்ளி, கல்லூரிகள் , திரையரங்குகள், வணிக வளாகங்கள் , மால்கள் என அனைத்தையும் வருகின்ற மார்ச் 31ம் தேதி வரை மூட உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் பயணி ஒருவர் உயர் வசதி பிரிவில் பயணிக்க தனக்கு கொரோனா இருப்பதாக பொய் கூறியுள்ளார். இதனை அறிந்த ஏர் இந்தியா அதிகாரிகள் அந்த பயணியை விமானத்தை விட்டு இறக்கி விட்டனர்.