தனுசு ராசி அன்பர்களே..! இன்று மடல் மூலம் மகிழ்ச்சியான தகவல்கள் வந்துசேரும். மற்றவர்கள் கடுமையாக நினைக்கும் வேலை ஒன்றை நீங்கள் எளிதாக செய்து முடிப்பீர்கள். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்ட முன்வருவார்கள். பணி நிரந்தரம் பற்றிய தகவல்கள் வந்து சேரும். இன்று மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். பதவிக்கு இருந்த இடையூறுகள் விலகிச்செல்லும். எதிர்பார்க்கும் உயர்வுகளை இன்று நீங்கள் அடையக்கூடும்.
உங்களுக்கு மதிப்பும, மரியாதையும் உயரும். குடும்பத்தில் உறவினர் வருகை இருக்கும். தேவையற்ற வீண் பேச்சுகளை மட்டும் குறைப்பதன் மூலம் குடும்பத்தில் அமைதி ஏற்படும். இன்று கணவன்-மனைவிக்கு இடையே அன்பு கூடும். நிதி மேலாண்மை சிறப்பாகவே இருக்கும். அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளையும் இன்று நீங்கள் பெற முடியும். இன்று மாணவச் செல்வங்கள் எதிலும் வெற்றி பெறுவார்கள், கல்வியில் நல்ல முன்னேற்றம் அடைவார்கள், தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்புடன் இருக்கலாம்.
அதிர்ஷ்ட திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: பிங்க் மற்றும் மஞ்சள் நிறம்