Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…மறக்க முடியாத சம்பவங்கள் நடைபெறும்…கோபத்தை மட்டும் தவிர்த்திடுங்கள்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று மறக்க முடியாத சம்பவங்கள் நடைபெறும் நாளாகவே இருக்கும். அலைச்சலுடன் கூடிய ஆதாயம் இன்று கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைபளு கொஞ்சம் அதிகரிக்கலாம். குடும்ப பெரியவர்களிடம் பக்குவமாக நடந்து கொள்வது ரொம்ப நல்லது. வாகன மாற்றச் சிந்தனை மேலோங்கும். இன்று பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடும். கோபத்தை மட்டும் தவிர்த்து பேசுவது ரொம்ப நல்லது. பேசும்பொழுது வார்த்தைகளை கோர்த்து பேசுவது ரொம்ப நல்லது.

கல்வியில் ஏற்பட்ட தடைகள் நீங்கி மாணவர்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். படிப்பிற்காக எடுக்கும் முயற்சியில் சாதகமான பலனை இன்று நீங்கள் பெறுவீர்கள். நண்பர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி கொடுப்பதாகவே அமையும். இன்று  எதையும் ஒருமுறைக்கு ஆலோசனை செய்து காரியங்களை செய்வது ரொம்ப நல்லது. பெரியோர்களிடம் கொஞ்சம் ஆலோசனையும் கேட்டு செய்யுங்கள், கூடுமானவரை கோபத்தை மட்டும் தவிர்த்துவிடுங்கள்.

இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று சனிக்கிழமை என்பதால் காக்கைக்கு எள் கலந்த சாதத்தை அன்னமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ளது உங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்புடன் வாழலாம்.

அதிர்ஷ்ட திசை:-தெற்கு

அதிர்ஷ்ட எண்:-3 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: இளம் சிவப்பு மற்றும் நீல நிறம்

Categories

Tech |