Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க தேன், பூண்டு போதும்.. எளிமையான டிப்ஸ்..!!

நோய் எதிர்ப்பு சக்திக்கு மட்டுமல்ல உடலில் எண்ணற்ற பல நன்மைகளை கொடுக்கும் அது என்னவென்று இப்பொழுது பார்க்கலாம்.!

பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தி நம் உடலில் அதிகமாக இருந்தால் தான் எந்த ஒரு சின்ன சின்ன நோயாக இருந்தாலும், பெரிய விதமான வைரஸ் நோயாக இருந்தாலும் நம் உடலை தாக்காது. அப்படித் தாக்கினால் கூட அதை எதிர்த்துப் போராடி நம் உடலில் அந்த வைரஸை உள்வாங்காமல் இருக்கும்.

அதற்காக தான் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்க வேண்டும். அதற்கான பழங்களையும், காய்கறிகளையும் சாப்பிடுவது ரொம்பவே அவசியம். அதேபோல இந்த ஒரு விஷயத்தையும் செய்வதன் மூலமாக உங்கள் உடலில்  எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பதே உண்மை.

தேவையான பொருள்:

தேன்  –  3 ஸ்பூன்
பூண்டு –  4 பல்

3 பல் பூண்டைப் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள்.ஒரு கிண்ணத்தில் 3 ஸ்பூன் தேன் எடுத்துக்கொள்ளுங்கள். எடுத்து வைத்திருக்கும் தேனில் இந்த பூண்டை சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள். ஒருமணிநேரம் தேனும், பூண்டையும் சேர்ந்ததை ஊறவிடுங்கள். தேனில் நோய் தீர்க்கும் பண்பு அதிகப்படியாக இருக்கும்.

அதுமட்டுமில்லாமல் பாக்டிரியா எதிரான பண்பும் இதில் அதிகமாக இருக்கிறது. நுண்ணுயிர்களுக்கு எதிராகப் போராடக்கூடிய பண்பும் தேனில் இருக்கிறது. அதனால்தான் நம் உடலில் எந்த ஒரு வைரஸ் அல்லது பாக்டீரியா வளர்ச்சியும் தடுக்கக்கூடிய தன்மை தேனில் அதிகமாக இருப்பதனால் நம்முடைய மருத்துவத்தில் தேன் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

பூண்டும் நாம் சாப்பிடக்கூடியதில் மருத்துவ பண்புகளை அதிகமாக கொண்டுள்ளது. இதுவும் மருத்துவத்தில் முக்கியமான ஒரு பொருளாக இருக்கிறது. இஞ்சி, பூண்டு, தேன் இவை அனைத்துமே நம் உடலுக்கு அதிகப்படியான சக்தியை அளிக்கக் கூடியது. கிருமிநாசினி, வேதிப்பொருள்களை பூண்டு தனக்குள் கொண்டுள்ளது.

இதனால் நம் உடலில் எந்த ஒரு கிருமிகளையும் அண்டவிடாமல் சக்தியை உண்டு பண்ணும்.  பூண்டு தனக்கான ஒரு முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது அந்த அளவிற்கு ஒரு எண்ணற்ற நன்மையை கொண்டதுதான் இந்த பூண்டும், தேனும். இதுபோல்  செய்து ஒரு மணி நேரம் ஊறவைத்து வாரத்திற்கு மூன்று முறை சாப்பிட்டு வந்தால் உங்களின் உடலில் எண்ணற்ற நன்மைகள் உண்டாகும்.

நோய்களை எதிர்த்துப் போராடக்கூடிய  அண்டிபயாடிக் பண்புகள் அதிகரிக்கும். அதுமட்டுமில்லாமல் உடலில் ஹீமோகுளோபின் அளவும் அதிகரிக்கும். பாக்டீரியாக்களும் வைரஸ்களும் உங்களைத் தாக்க முடியாத சூழ்நிலை உருவாகும்.

Categories

Tech |