கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் 54 விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் மூன்று பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஒருவர் குணமாகி வீடு திரும்பிய நிலையில் இருவர் தனிமைப்படுத்தப்பட்டு , தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. பெரிய பெரிய கடைகள், மால்கள், திரையரங்குகள் அனைத்தையும் மூட தமிழக அரசு உத்தரவிட்டது.
பொதுமக்கள் யாரும் அதிகமாக கூட்டமாக கூட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு , நாளை நடக்கும் சுய ஊரடங்கை தமிழகம் முழுமையாக ஆதரிக்க இருக்கின்றது. இந்நிலையில் மக்கள் கூட்டம் பல இடங்களில் குறைவாகவே இருந்து வருகிறது. இதனால் சென்னை விமான நிலையத்தில் மொத்தம் 54 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளதால் விமான சேவைகள் ரத்து ஆகியுள்ளது. 26 சர்வதேச விமானமும் , 28 உள்ளூர் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.