தஞ்சையில் 5 மாத குழந்தைக்கு கொரோனோ நோய் தொற்று கண்டறியப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனோ வைரஸ் நோய் தொற்று இந்தியாவிலும் தீவிரம் காட்டி வரும் சூழ்நிலையில், அதனை ஆரம்ப காலகட்டத்திலேயே தடுத்து நிறுத்தும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் நோயின் தாக்கம் சற்று வீரியத்துடன் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் இதனுடைய தாக்கம் சற்றுக் குறைவாக காணப்பட்டாலும், ஆங்காங்கே கொரோனோ அறிகுறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் 5மாத குழந்தை ஒன்றுக்கு கொரோனோ அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது காய்ச்சல், இருமல் என பல்வேறு அறிகுறிகளைக் கொண்ட சேயும், தாயும் தஞ்சாவூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.