Categories
மாநில செய்திகள்

மீன்களையும் விட்டு வைக்காத கரோனா வதந்தி – கலக்கத்தில் மீனவர்கள்!

கோழியால் கரோனா பரவுகிறது என்ற வதந்தியால் கறிக்கோழி மற்றும்  முட்டையின் விலை கடும் சரிவை கண்டது இதைத்தொடர்ந்து  சென்னையில் மீன் கடைகளும் காற்று வாங்கத் தொடங்கியுள்ளன.

சீனாவில் உருவான கரோனா வைரஸ் நாடெங்கும் பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த மத்திய  மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது.

கரோனா வைரஸ் எங்கிருந்து பரவியது என்பதைவிட அது மிருகங்களிடமிருந்து பரவியிருக்கலாம் என்ற அச்சம் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இருப்பினும் மக்கள் தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என அரசுத் தரப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னை நகரில் உள்ள ஆடு மற்றும் கோழி இறைச்சிக் கடைகளில் மக்கள் இறைச்சி வாங்குவதை பெருமளவு தவிர்த்து வந்ததுடன், மீன் உள்ளிட்ட கடல் உணவுகளை வாங்கக் குவிந்தனர்.

ஆனால் கடந்த இரண்டு நாட்களாக கரோனா பற்றிய அச்சம் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில், மீன் விற்பனையும் வெறிச்சோடிய நிலையில் உள்ளது.

இதனால் பல  மீன் கடைகள் பெருமளவில் மூடப்பட்டுள்ளன. மீன் விற்பனை முடங்கியுள்ளதால் மீனவர்கள் பெரும் கலக்கம் அடைந்துள்ளனர்.

ஆனால், கரோனா குறித்த எந்தவித அச்சமுமின்றி இருக்கின்றனர் மீனவர்கள். எங்களிடம் கரோனா வைரஸ் நெருங்க வாய்ப்பில்லை என்று தன்னம்பிக்கையுடன் கூறுகின்றனர்.

Categories

Tech |