Categories
மாநில செய்திகள்

”எல்லாரையும் இங்க வச்சு இருக்கோம்” முக.ஸ்டாலினுக்கு அமைச்சர் பதில் …!!

டெல்லியில் இருந்து சென்னை வந்த இளைஞருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் முக.ஸ்டாலின் இது தொடர்பான கேள்வியை பேரவையில் எழுப்பினார்.

கடந்த 18ஆம் தேதி டெல்லியில் இருந்து ரயிலில் சென்னை வந்த இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் ராஜீவ்காந்தி மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இது குறித்து இன்றைய சட்டப்பேரவையில் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

அதில் , டெல்லியில் இருந்து சென்னை வந்த இளைஞரின் உடல் நலம் எப்படி இருக்கிறது? அவருடன் யார் யாரெல்லாம் பயணம் செய்தார்கள் என்ற விபரம் தெரியுமா ? விவரங்கள் உங்களிடம்  இடமிருக்கிறதா ? மக்களிடம் உண்மை நிலையை தெரியப்படுத்த வேண்டும் ? என்று கேள்வி எழுப்பினார்.இதற்கு பதிலளித்த அமைச்சர் சுகாதாரத்துறை விஜயபாஸ்கர் , டெல்லி இருந்து சென்னை வந்த 193 பேர் தனிமைப்படுத்தப்பட்டு , கண்காணிப்பில் உள்ளதாக தெரிவித்தார்.

Categories

Tech |