Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு ….!!

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பதாக முதல்வர் அறிவித்துள்ளார்.

இந்தியாவில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ்சை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. நாளைய தினம் நாடு முழுவதும் சுய ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பேருந்துகள் , சந்தைகள் என எதும் இயங்காது என்று அறிவித்துள்ளனர். நாளைய ஊரடங்கு உத்தரவுக்கு தமிழகம் முழு ஒத்துழைப்பு வழங்கும் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் , கொரோனா தடுப்பு நடவடிக்கையாக விடப்பட்டுள்ள விடுமுறையை பயன்படுத்தி மக்கள் பல இடங்களில் கூடுவது வேதனை அளிப்பதாக தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் பொது மக்கள் கூடுவதை தடுக்கும் வகையில் சென்னையில் உள்ள கடைகரைகளுக்கு மக்கள் வர அனுமதியில்லை என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 8ஆம் வகுப்பு வரை தேர்வுகளை ரத்து செய்ய வேண்டுமென்ற கேள்விக்கு பதிலளித்து பேசிய தமிழக முதலவர் நடைபெற இருந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார். மார்ச் 27ஆம் தேதி தொடங்க இருந்த இந்த தேர்வை 9 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதுகின்றார்கள். எனவே கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏப்ரல் 14ஆம் தேதிக்கு பிறகு 10ஆம் வகுப்பு தேர்வு நடைபெறுமென்று முதல்வர் தெரிவித்தார்.

Categories

Tech |