Categories
தேசிய செய்திகள்

கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து எப்படி பரவுகிறது? – வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி!

கொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்பதை விளக்கும் வகையில் வீடியோ ஒன்றை பிரதமர் மோடி டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் இந்த வைரஸால் இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 298ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வைரஸுக்கு 4 இந்தியர்கள், ஒரு இத்தாலியர் என மொத்தம் 5 பேர் பலியாகியுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பிரதமா் மோடி அறிவித்துள்ளார். அதில் நாளை பொதுமக்கள் சுயஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் எனவும் அவர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்பதை விளக்கும் வகையில் வீடியோ ஒன்றை பிரதமர் மோடி டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். சிறிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் கூட பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி பல உயிர்களை காக்க கூடியது என குறிப்பிட்டுள்ளார்.

இந்த அருமையான வீடியோவை தாம் சமூக வலைதளத்தில் பார்த்ததாகவும், இத்தகைய கொரோனா விழிப்புணர்வு தொடர்பான நல்ல வீடியோ இருந்தால் நீங்களும் #IndiaFightsCorona என்ற ஹேஸ்டேக்கில் பகிருங்கள் என பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் COVID-19 அவசர நிதிக்கு மாலத்தீவு அரசு 200,000 அமெரிக்க டாலர் வழங்கிய பங்களிப்பிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் நமது தீர்மானத்தை பலப்படுத்துகிறது என குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |