கல்லூரி சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 17ஆம் தேதியிலிருந்து கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை என்பது அறிவிக்கப்பட்டிருந்தாலும் ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் பணிக்கு வரவேண்டும் என்றுதான் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. தமிழக உயர்கல்வித்துறை சார்பிலும் இந்த அறிவிப்பு தான் சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டு இருந்தது.
இந்நிலையில் தற்போது மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் ஆசிரியர்கள் , ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மார்ச் 31ம் தேதி வரை வீட்டில் இருந்தே பணியாற்ற உத்தரவிட்டுள்ளனர். கொரோனா முன்னெச்சரிக்கையாக மார்ச் 31 வரை கல்லூரி, சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய அறிவுறுத்தபட்டுள்ளது.