சிம்மம் ராசி அன்பர்களே..! குடும்ப விவகாரத்தில் தீர்வு ஏற்படும் நாளாகவே இருக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு பூர்த்தி ஆகும். நிலுவைப்பணம் வசூலாகும். நண்பருக்கு தேவையான உதவிகளைச் செய்வீர்கள். பெண்கள் இஷ்டதெய்வ வழிபாடு நடத்துவார்கள். சுபகாரிய முயற்சிகள் மேற்கொண்டால் சில தடைகளுக்கு பின் கைகூடும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை கொடுப்பதை தவிர்த்து, சிந்தித்து செயல்பட்டால் ஓரளவிற்கு லாபம் கிடைக்கும்.
குடும்பத்திலிருந்து பிரிந்து சென்ற நபர் மீண்டும் வந்து செல்வார்கள். இன்றைய நாள் ஓரளவு மகிழ்ச்சியாகத்தான் இருக்கும். மாணவக் கண்மணிகளும், பொதுமக்களும் இன்று காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை நாம் வீட்டில் இருப்பது ரொம்ப நல்லது. வைரஸ் தொற்றின் காரணமாக நாம் செய்யும் காரியங்கள் வீட்டில் செய்து கொள்வது ரொம்ப நல்லது. வைரஸ் தொற்றின் காரணமாக நாம் வெளியில் செல்லாமல் இருப்பது ரொம்ப நல்லது. வைரஸின் தொற்றின் காரணமாக நம்முடைய இந்திய அரசாங்கம் சொல்கின்ற அனைத்து விஷயங்களையும் பொதுமக்கள் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்..
தயவு செய்து இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் இருப்பது நல்லது, உங்களுடைய உடல் ஆரோக்கியத்தை நீங்கள் பேணி பாதுகாக்க பாடுபடுங்கள். நாடுகளுடைய அதிகப்படியான உயிரிழப்பிற்கு காரணமே, அந்த நாட்டின் மக்களுடைய அலட்சியம்தான். தயவுசெய்து இந்த விஷயத்தில் நாம் அலட்சியம் காட்டாமல் சுகாதாரத்துறை சொல்கின்ற அனைத்து விஷயங்களையும் நாம் சரியான முறையில் பயன்படுத்தி இந்த வைரஸ் தொற்றை முழுமையாக ஒழித்திட, அனைவரும் நாம் கைகோர்த்து பாடுபட வேண்டும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் பச்சை நிறம்