மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்று நடப்பீர்கள். திட்டமிட்ட பணிகள் கூடுதல் கால அவகாசத்தை நிறைவேற்றுவீர்கள். தொழில் வியாபாரத்தில் மறைமுக போட்டிகள் குறுக்கிடும். வெளியூர் பயணத்தில் திடீர் மாற்றங்கள் செய்வீர்கள். பிள்ளைகளால் உதவிகள் உண்டாகும். இன்று வாழ்க்கை துணையாக செலவு செய்ய நேரிடும். கோபத்தை குறைத்து இனிமையாக பேசுவதன் மூலம் குடும்பத்தில் அமைதி ஏற்படும். நன்மை தீமை கலந்த பலன்களை இன்று நீங்கள் பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்த மருத்துவ செலவுகள் படிப்படியாக குறையும்.
உற்றார் உறவினர்கள் தக்க சமயத்தில் உங்களுக்கு உதவிகளை செய்வார்கள். தேவையற்ற செலவுகளை மட்டும் தயவு செய்து குறைத்துக் கொள்வதால் கடன் பிரச்சினைகளில் இருந்து தவிர்க்கலாம். அதுமட்டுமில்லை இன்று மாணவர்களும் பொதுமக்களும் தயவுசெய்து வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது. வைரஸ் தொற்று காரணமாக நம்மளுடைய அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை அன்று 7 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கும் வெளியில் செல்லாமல் இருப்பதும், தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொள்வதும் ரொம்ப நல்லது. குடும்பத்தாரிடம் கொஞ்சம் நேரம் செலவிடுங்கள்.
தயவுசெய்து நாளை வெளியில் வருவதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். எந்த வேலையாக இருந்தாலும் நாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம். இந்த வைரஸ் தொற்றிலிருந்து நம்மளையும், நம்முடைய குடும்பத்தாரையும், நம்முடைய நண்பர்களையும் பாதுகாப்பதற்கு அரசாங்கம் சொல்வதை நாம் அலட்சியம் காட்டாமல் செய்து வந்தாலே போதும். மற்ற நாடுகளில் ஏற்பட்ட உயிரிழப்பிற்கு காரணமே அந்த நாட்டினுடைய அலட்சியம்தான். அலட்சியம் எந்த அளவிற்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியது என்பதை மற்ற நாடுகளை வைத்துக்கொண்டே கற்றுக்கொள்ளலாம். தயவுசெய்து அலட்சியம் காட்டாமல் நாளை காலை 7 மணி முதல் 8 மணி வரை தயவுசெய்து வீட்டை விட்டு வெளியில் வராமல் இருப்பது ரொம்ப நல்லது.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்