Categories
உலக செய்திகள்

77 வேதிப்பொருள்…. கொரோனோவை அழிக்க மருந்து…. சூப்பர் கம்ப்யூட்டர் கண்டுபிடிப்பு….!!

அமெரிக்காவில் கொரோனோ வைரஸை அழிக்கும் வேதிப்பொருளை சூப்பர் கம்ப்யூட்டர் கண்டுபிடித்துள்ளது.

தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் உயிர்க்கொல்லி கொரோனோ வைரஸை அழிப்பதற்கான மருந்து தயாரிக்கும் பணியில் சீனா அமெரிக்கா உள்ளிட்ட மிகப்பெரிய வல்லரசு நாடுகளும், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில், அமெரிக்காவின் சூப்பர் கம்ப்யூட்டர் ஒன்று கொரோனோவை அழிக்கும் விதமாக வேதிப்பொருளை கண்டுபிடித்துள்ளது. அதில் கிட்டத்தட்ட 77 வேதிப் பொருட்களை ஒன்றாகக் கலப்பதன் மூலம் வைரசை அழித்து விடலாம் என்று அந்த சூப்பர் கம்ப்யூட்டர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |