சுய ஊராடங்கை முழுமையாக கடைபிடிக்க செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம்.
இந்தியாவில் கொரோனோ பாதிப்பைத் தடுக்கும் விதமாக இன்று ஒருநாள் சுய ஊரடங்கை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார். அவரது அறைகூவலை இந்திய மக்கள் ஏற்றுக்கொண்டு இன்று ஒருநாள் முழுவதும் சுய ஊரடங்கை கடைப்பிடிக்க உள்ளனர். இதன்படி வீட்டை விட்டு யாரும் வெளியில் செல்லக்கூடாது என்று மன உறுதியுடன் உறுதிமொழி எடுத்துக் கொண்டு உள்ளனர். ஆனாலும் ஒரு நாள் முழுவதும் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருப்பது என்பது மிக சவாலான ஒன்று தான் எப்படியானாலும் வெளியில் சென்று வரலாம் என்ற எண்ணம் தோன்றத்தான் செய்யும்.
ஆனால் வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது என்பதால் கீழ்க்கண்ட இவற்றை பின்பற்றினால் ஓரளவுக்கு வெளியில் செல்லும் எண்ணம் தோன்றாது.அது என்னவென்றால், நீண்ட நாள் படிக்க வேண்டும் என்று நினைத்த புத்தகத்தை எடுத்துப் படிக்கலாம். குழந்தைகள் குடும்பங்களோடு பேசி நேரத்தை செலவிடலாம். பழைய புகைப்படங்களை பார்த்து நினைவுகளை பகிர்ந்து சந்தோஷம் அடையலாம் அல்லது உடற்பயிற்சி உள்ளிட்ட புதிய புதிய ஆரோக்கியமான செயல்களை நாளை முதல் மேற்கொள்ளலாம். இவற்றின் மூலம் வெளியில் செல்ல வேண்டும் என்ற எண்ணம் பாதியாக குறையும்.