தஞ்சை அருகே கொரோனோ நடவடிக்கை மேற்கொள்ள சென்ற கலெக்டர் வீட்டிலையே கொள்ளையர்கள் கை வரிசை காட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனோ வைரசுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகள் உரிய நேரத்தில் மேற்கொள்ளப் படுகிறதா? என்பதை கண்காணிக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் துரிதப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் கொரோனோ நடவடிக்கைகள் மேற்கொள்ளும் பணியில் ஈடுபட்டு வந்தார். இதை அறிந்த கொள்ளையர்கள் தஞ்சாவூர் கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து கைவரிசை காட்டி 50 சவரன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.